மரம் வெட்டும் இயந்திரங்கள் பதிவு செய்யும் கால எல்லை நீடிப்பு!
Friday, March 1st, 2019
மரம் வெட்டும் இயந்திரங்களை பதிவு செய்வதற்கான கால எல்லை இம்மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி அரசு, அரை அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தப்படும் அனைத்து மரம் வெட்டும் இயந்திரங்களும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் மார்ச் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்து அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த வேலைத்திட்டம் கடந்த மாதம் 20 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தொடர் மழையால் தொற்று நோய்கள் பரவும் அபாயம்!
நாடாளுமன்ற தேர்தல்: யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இம்முறை 33 முனைகளில் போட்டி- 3 சுயேட்சைக் குழுக்களின் ம...
1,000 ரூபாயை வழங்க மறுக்கும் தோட்ட கம்பெனிகளின் ஒப்பந்தம் இரத்தாகும் - அரசாங்கம் எச்சரிக்கை!
|
|
|


