மரண தண்டனைக்கான தடையை தொடருமாறு ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள்!

Wednesday, April 10th, 2019

மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை இலங்கை அரசாங்கம் தொடரவேண்டும் என ஐரோப்பிய சங்கத்தின் பிரதிநிதிகள் மீண்டும் இலங்கைக்கு வலியுறுத்தியுள்ளது.

இலங்கையிலுள்ள பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, நோர்வே, சுவிட்சர்லாந்து, பிரிட்டன் மற்றும் கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தூதரகங்களுடனான இணக்கப்பாட்டின் அடிப்படையில் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு விடுத்துள்ள அறிக்கையில் இந்த வேண்டுகோள் இடம்பெற்றுள்ளது.

இலங்கை அரசாங்கம் போதைப்பொருளிற்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதன் ஒரு பகுதியாக 43 வருடங்களின் பின்னர் மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் பரவலை கட்டுப்படுத்துவது உலக நாடுகளிற்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது என்பதையும் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அவசியம் என்பதையும் ஏற்றுக்கொள்வதாக ஐரோப்பிய ஒன்றியம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: