மயிரிழையில் தப்பிய பிரித்தானிய விமானம்!

ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்று மயிரிழையில் தப்பிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
அமெரிக்கா, ஈரான் நாடுகள் இடையே முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது மோதல் வலுபெற்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஈராக்கில் அமெரிக்கா மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் ஈரானின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதையடுத்து, இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது.
அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் 12க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 80 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் இந்தியாவின் மும்பை நகரில் இருந்து லண்டன் நோக்கி பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. ஈராக் வான்பரப்பில் நுழைந்த விமானம் திடீரென ஏதென்ஸ் வழியாக லண்டன் நோக்கிச் சென்றது.
அந்த சமயத்தில்தான், அமெரிக்கா படைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் இருந்த 200 பயணிகளும் மயிரிழையில் உயிர் தப்பியமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|