மன்னார் கற்கிடந்தகுளம் றோ.க.த.க.பாடசாலைக்கு விரைவில் நிரந்தர விளைாயாட்டு மைதானம் – ஈ.பி.டி.பியின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் துரித நடவடிக்கை!

Friday, April 5th, 2024

மன்னார்/ கற்கிடந்தகுளம் றோ.க.த.க.பாடசாலைக்கானா விளையாட்டு மைதானம் ஒன்றை பெற்றுக்கொடுப்பதற்கு ஈழ மக்கள் ஜனாநயக கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குறித்த மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான குலசிங்கம் திலீபன் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் கூறுகையில் –

சுமா 200 மாணவர்கள் கல்வி கற்கும் குறித்த பாடசாலை மாணவர்கள் விளையாட்டுத் துறையில் மாவட்ட ரீதியாகவும் மாகாண ரீதியாகவும் சிறந்த பெறுபெறுகளை எட்டியுள்ள நிலையிலும் பாடசாலைக்கென விளையாட்டு மைதானம் ஒன்று இன்மையால் மாணவர்களின் விளையாட்டுதுறை செயற்பாடுகளை மேலும் வலுவாக்கவதில் பாரிய சௌகரியங்கள் நாளாந்தம் இருந்துவருகின்றது.

இந்நிலையில் பாடசாலை சமூகம் ஈழ மக்கள் ஜனாநயக கட்சியின் குறித்த பிரதேச நிர்வாகத்தினரிடம் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக, நேரடியாகச் சென்று, அதிபருடன் கலந்துரையாடல் மேற்கொண்டிருந்த நிலையில் அவ்விடயம் தொடர்பில் பிரதேச செயலாளர் திருமதி சிவசம்புவுடன் தொலைபேசியில் கலந்துரையாடியதன் அடிப்படையில், மன்னார் பிரதான வீதியில் மைதானத்திற்கான காணி ஒன்று அடையாளப் படுத்தப்பட்டது.

அத்துடன், குறித்த காணி தொடர்பில் காணிப் பயன்பாட்டுக் குழுவின் அனுமதி பெற்று பாடசாலைக்கு கையளிப்பதாக பிரதேச செயலாளர் உறுதியளித்துள்ளார் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: