மன்னாரில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் !
Sunday, June 6th, 2021
மன்னாரில் மேலும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் மன்னாரில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 522 ஆக பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் வைத்தியர் ரி.வினோதன் மேலும் தெரிவிக்கையில் “இந்த வருடத்தில் இதுவரை 505 பேர், கொரோனா வைரஸ் தொற்றாளராக மன்னாரில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் இந்த மாதம் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 15 பேர், வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
மாலபே தனியார் மருத்துவ கல்லூரி மூடப்படாது - உயர்கல்வி அமைச்சர் கிரியெல்ல!
தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்கான கட்டணங்கள் ஒழுங்குறுத்தல்!
நடத்துனர்களின்றி தனியார் பேருந்துகளை இயக்க திட்டம் - ஜனவரி மாதம்முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவ...
|
|
|


