மன்னாரில் மற்றுமொரு புதிய காற்றாலை – கேள்விப்பத்திரங்களைக் கோரவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவிப்பு!

Wednesday, February 21st, 2024

மன்னாரில் புதிய காற்றாலை ஒன்றை அமைப்பதற்கு கேள்விப்பத்திரங்களைக் கோரவுள்ளதாக இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

அதே பகுதியில் 100 மெகாவோட் காற்றாலைத்திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் புதிய காற்றாலை 50 மெகாவோட் திறனை உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

காற்றாலை தவிர, மொத்தம் 165 மெகாவோட் திறன் கொண்ட சூரிய மின் நிலையங்களை அமைப்பதற்கான கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் எரிசக்தி ஆதாரங்களை பன்முகப்படுத்தவும், புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கொள்வனவு செய்யவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

சமத்துவ ஒற்றுமையினையும்  ,நல்லெண்ணத்தையும் கட்டியெழுப்பும் வகையில்  யாழில் வடக்கு-தெற்கு மாணவர்களின்...
பாசையூர் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு நிலக்கீழ் குழாய் - றெமீடியஸ் கோரிக்கைக்கு அங்கீகாரம்!
மறு அறிவித்தல்வரை யாழ்ப்பாணம் உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கான தொடருந்து சேவைகள் இடைநிறுத்தம் - தொடருந்...

யாழ்.போதனா வைத்தியசாலையில் குருதித் தட்டுப்பாடு - இரத்ததானம் செய்யவதற்கு முன்வருமாறு பொதுமக்களிடம் அ...
அரைசொகுசு பேருந்து சேவைகளுக்காக வழங்கப்பட்டுள்ள 430 அனுமதிப் பத்திரங்களை இரத்து செய்ய நீதிமன்றம் இடை...
செப்டம்பர் 14 முதல் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவுடன் பேச்சுவார்த்தை - அரச நிதி அமைச்சர் ரஞ்சித் சி...