மன்னாரில் கனிய எண்ணெய் வளம் தொடர்பில் தரவு சேகரிப்பு ஆரம்பம்!

Thursday, September 16th, 2021

மன்னார் மற்றும் காவிரி பள்ளத்தாக்கில் கனிய எண்ணெய் வளம் தொடர்பான ஆய்வுகளுக்காக முதற்தடவையாக விமானங்களை பயன்படுத்தி தரவுகளை சேகரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பிரித்தானியாவை தளமாகக்கொண்ட பிரபல ஆய்வு நிறுவனத்தின் ஊடாக குறித்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நாட்டில் கனிய எண்ணெய் காணப்படக்கூடிய பகுதிகள் 20 ஆக பிரிக்கப்பட்டுள்ளதுடன், அதில் ஒரு பகுதியை தனியார் நிறுவனமொன்று நீண்டகாலம் ஆய்வு செய்வதாகவும், அதற்காக அதிக பணம் செலவிடப்படுவதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனால் குறித்த 20 பெரும்பகுதிகளையும் 837 அலகாக பிரித்து புதிய வரைபடத்தை தயாரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வரைப்படத்திற்கு அமைய தரவுகளை சேகரிப்பதற்காக விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: