மனித உரிமை சட்டத்தரணியும் மனித கெளரவத்திற்கான மன்றத்தின் செயலாளருமான மகேஸ்வரி வேலயுதத்தின் 13 ஆவது நினைவு தினம் இன்று!

இலங்கையின் முன்னணி மனித உரிமை சட்டத்தரணியும் மனித கெளரவத்திற்கான மன்றத்தின் செயலாளருமான செல்வி மகேஸ்வரி வேலயுதத்தின் 13 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். இந்நிலையில் அன்னாரின் 13 ஆவது நினைவு தினம் இன்று நினைவு கூரப்பட்டது.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சட்ட ஆலோசகராக திகழ்ந்த மனித உரிமை சட்டத்தரணியான செல்வி மகேஸ்வரி வேலாயுதம் இலங்கையில் நடந்த அழிவு யுத்தத்தின்போது கைது செய்யப்பட்டவர்களுக்காக இலவச சட்ட ஆலோசனைகளை வழங்கி பல நூறு அரசியல் கைதிகளை விடுவிப்பதில் பெரும் பங்காற்றியிருந்த ஒருவராவார்.
அதுமாத்திரமன்றி அன்றைய யுத்த காலத்தில் காணாமல் போன உறவுகளுக்கு பரிகாரம் பெற்றுக்கொடுப்பதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனையின் பெயரில் காணாமல் போனோருக்கான அமைப்பு ஒன்றை நிறுவி அதனூடாக பலருக்கு பரிகாரங்களை பெற்றுக்கொடுத்துமுள்ளார்.
அதேபோன்று கிருசாந்தி குமாரசுவாமி உள்ளிட்ட படுகொலை செய்யப்பட்ட பல தமிழ் உறவுகளின் மரணங்களுக்குக் காரணமானவர்களை வெளிக்கொண்டு வந்ததுடன் தனது சட்டத் திறமையூடாக குற்றவாழிகளுக்கு தண்டனையும் பெற்றுக்கொடுத்து இறந்த உறவுகளின் வாழும் உறவுகளுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுத்த ஒருவராகவும் இருந்துள்ளார்.
இவ்வாறு தனது சட்டப் புலமையால் தமிழ் மக்களின் துன்பங்களை துடைத்துவந்த வேளையில் மனித உரிமை சட்டத்தரணியான செல்வி மகேஸ்வரி வேலாயுதம் சுகயீனமுற்றிருந்த தனது தாயாரான ஆசிரியை ஈஸ்வரி வேலாயுதத்தை பார்ப்பதற்காக தனது சொந்த ஊருக்கு சென்றிருந்த சமயம் இதே தினத்தன்’று 2008 மே புலிகளால் சுட்டு படுகொலை செய்யப்படார்.
இந்நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சட்ட ஆலோசகராகவும் மனித கெளரவத்திற்கான மன்றத்தின் செயலாளருமாக விளங்கிய செல்வி மகேஸ்வரி வேலயுதம் மறைந்து 13 ஆண்டுகள் கடந்தவிட்டாலும் அவரது வரலாறு எம்முடன் வாழ்ந்துகொண்டே இருக்கின்றது. அந்தவகையில் அன்னாருக்கு நாமும் அகவணக்கம் செலுத்துகின்றோம்.
Related posts:
|
|