மனிதநேயமிக்க தேரரின் மறைவிற்கு டக்ளஸ் தேவானந்தா இரங்கல்!

Saturday, March 12th, 2016

அஸ்கிரிய பீடாதிபதி கலகம சிறி அத்ததஸ்ஸி தேரரின் மறைவு பௌத்த மக்களுக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் தனது அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அஸ்கிரிய பீடாதிபதியின் மறைவு பௌத்த மக்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அமைதியான வாழ்க்கையை பின்பற்றிய கலகம தேரர் பௌத்த மதத்திற்கும் பௌத்த மக்களுக்கும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றினார்.

1936ஆம் ஆண்டு துறவறம் பூண்ட தேரர் கடந்த எட்டு தசாப்த காலமாக பௌத்த மதத்தின் வளர்ச்சிக்காகவும் பௌத்த மக்களின் மேம்பாட்டுக்காகவும் இறுதிக்காலம் வரை பாரிய பங்களிப்பு வழங்கியுள்ளார்.

இத்துறவியின் இழப்பானது பௌத்த மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பென தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா சிங்களம், பாளி, சமஷ்கிருதம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளை முறையாக கற்றுத் தேர்ந்திருந்த சிறந்ததொரு அறிவாளியின் பேரிழப்பில் நாமும் பெரும் துயரடைகின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts: