மத்திய வங்கி சட்டமூலம் தொடர்பில் உதய கம்மன்பில தெரிவித்த கருத்து முற்றிலும் பொய்யானது – சபாநாயகர் தெரிவிப்பு!

மத்திய வங்கி சட்டமூலம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்த கருத்து முற்றிலும் பொய்யானது என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான கருத்துக்கள் நாட்டின் நீதித்துறையை தவறாக வழிநடத்துவதும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை பொறுப்பான சபை உறுப்பினர் என்ற வகையில் உதய கம்மன்பில செவிமடுத்திருக்க வேண்டும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
யாரோ ஒருவரின் அறிக்கையை தவறாக சித்தரித்து குறுகிய அரசியல் இலக்குகளை அடைய பொதுமக்களை தவறாக பயன்படுத்த கூடாது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
பொதுமக்களை தவறாக வழிநடத்த உதய கம்மன்பில மேற்கொண்ட கீழ்த்தரமான முயற்சி குறித்தும் சபாநாயகர் கண்டனமும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர் தொடர்ந்தும் அமுலாகும்!
சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடுவோர் குறித்து அவதானமாக இருங்கள்!
நாளாந்தம் 3 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை - சிவில் விமான சேவைகள் அதிகார சபை!
|
|