முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்க நடவடிக்கை!
Sunday, April 5th, 2020
கொரோனா எச்சரிக்கை காரணமாக முதியோர், ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கு உதவித்தொகையை நாளை (06) வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது இந்த உதவித் தொகை ஊனமுற்றோர், சிறுநீரக நோயாளிகள் மற்றும் காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களுக்கும் வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது ஏப்ரல் மாதத்தில் ரூபா.2000 தொகை கிடைக்கப்பெற்ற 70 வயதுக்கு அதிகமான முதியவர்களுக்கு ரூபா.3000 மேலதிக கொடுப்பனவு நாளைய தினம் வழங்கப்படவுள்ளது.
இந்நிலையில், சமுர்த்தி பயனாளிகள் உள்ளிட்ட ஏனையவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் செயற்றிட்டம் நாளை மறுதினம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
முக கவசங்களை ஏற்றுமதி செய்யவோ அல்லது மீள் ஏற்றுமதி செய்யவோ கூடாது - பாதுகாப்பு அமைச்சு!
மீன்பிடி படகு ஏலம் தொடர்பில் இரு நாட்டு அரசாங்கங்களுக்கும் இடையே புரிந்துணர்வு உள்ளது - இந்திய உயர்ஸ...
போலியான குறுஞ் செய்திகள் குறித்து அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு பொதுமக...
|
|
|


