மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க – இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் சந்திப்பு – வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் எனவும் உறுதியளிப்பு!

Saturday, May 11th, 2024

மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவிற்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு அமெரிக்கத் தூதரகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இருதரப்பு உறவுகள், கடன் மறுசீரமைப்பு மற்றும் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் சீர்திருத்தங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கைக்கு வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: