மத்திய கிழக்கில் இருந்து இன்று அதிகாலை 447 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!
 Sunday, August 9th, 2020
        
                    Sunday, August 9th, 2020
            
கொரோனா தொற்றுக் காரணமாக மத்திய கிழக்கில் சிக்கித் தவித்த 447 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
அதன்படி டுபாயிலிருந்து எமிரேடஸ்ட் ஈ.கே.648 என்ற விமானத்தினூடாக அதிகாலை 1.15 மணிக்கு 420 இலங்கையர்கள் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து 43 இலங்கையர்களுடன் கட்டார் ஏயர்வேஸ் விமானமொன்று தோஹாவிலிருந்து அதிகாலை 1.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
மேலும் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக சீனாவில் சிக்கித் தவித்த 112 இலங்கையர்கள் சாங்காயிலிருந்து நேற்றிரவு நாடு திரும்பியுள்ளனர்.
இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவரும் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
யாழ்ப்பாணம் பொதுநூலகத்திற்கு நான்காவது தடவையாகத் தேசிய விருது!
குடாநாட்டின் நீர்ப் பிரச்சினையை தீர்க்க பாரிய திட்டம்!
உரக் கலன்கள் வெடிப்பு சம்பவத்தை பெரிதுபடுத்துவதில் நியாயமில்லை -  அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெர...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        