உரக் கலன்கள் வெடிப்பு சம்பவத்தை பெரிதுபடுத்துவதில் நியாயமில்லை – அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு!

Monday, December 13th, 2021

800 ஆயிரம் விவசாயிகளுக்கு தரமான உரம் வழங்கப்பட்ட நிலையில் நான்கைந்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட திரவ உரக் கலன்கள் வெடித்துச் சிதறியதாக மாத்திரம் பேசுவதில் நியாயமில்லை என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

கமநல சேவை நிலையங்களின் ஊடாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட திரவ உரக் கலன்கள் வெடித்து சிதறிய சம்பவங்கள் சில இடங்களில் பதிவாகியிருந்தன.

நான்கைந்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட திரவ உரக் கலன்கள் அதிக நைட்ரஜன் செயற்பாடு காரணமாக வெடித்துச் சிதறியுள்ளன என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கூறினார்.

இவ்வாறு வெடித்த திரவ உரம் துர்நாற்றம் வீசுவதாகவும், மீன் கழிவுகளை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது போல் இருப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

மீன் சார்ந்த உரத்தை விவசாயிகள் நீண்ட காலமாக பயன்படுத்தி வருகின்றனர் என்றும் இது நல்ல நைட்ரஜன் உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் வெடித்ததாகக் கூறப்படும் உரம் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என இதுவரை விவசாய அமைச்சு அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: