தொடரும் மழையுடன் கூடிய கால நிலை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை தொடரும் – அனைத்து குளங்களும் வான் பாய்கின்றது – அனர்த்த முகாமை பிரிவு எச்சரிக்கை!

Sunday, December 17th, 2023

அனைத்து குளங்களும் வான் பாய்வதால் மக்கள் அவதானமாக இருக்குமாறும், ஆபத்துக்கள் ஏற்படும் பட்சத்தில் கிராம சேவையாளரின் உதவியுடன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் இன்று (17.12.2023) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,

மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தற்போது நிலவி வருகின்ற மழையுடன் கூடிய கால நிலையானது எதிர்வரும் 20 ஆம் தேதி வரை தொடரக்கூடிய சாத்தியப்பாடுகள்  காணப்படுகின்றது

இதேவேளை இன்னும் ஒரு குறைந்த காற்றழுத்தம் ஒன்று எதிர்வரும் 24ஆம் திகதி அளவில் உருவாகி அதன் மூலமும் மழைவீழ்ச்சி வடக்கு மாகாணத்துக்கு அதிகளவு கிடைக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகஅந்த அறிக்கை கூறுகின்றது.

இவ்வாறு கிடைக்கின்ற மழை வீழ்ச்சியானது மிக கனதியாக குறுகிய நேரத்தில் கிடைப்பதனால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் வீதிகள் தாழ்வான இடங்களில் வெள்ள நீர் தேங்கி நிற்கக்கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுவதுடன் இந்நீர் வழிந்து ஓட முடியாத நிலைமையையும் காணப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்  அனைத்து குளங்களும் வான் பாய்வதால் மக்கள் அவதானமாக இருக்குமாறும், ஆபத்துக்கள் ஏற்படும் பட்சத்தில் கிராம சேவையாளரின் உதவியுடன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதேவேளை மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேவன்பிட்டி, பாலியாறு கிராமங்களில் 131 குடும்பங்களை சேர்ந்த 438 நபர்கள் இடம் பெயர்ந்து தற்காலிக இடைத்தங்கல்   முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

மன்னார் யாழ்ப்பாணம் A-32 வீதியில் காணப்படுகின்ற  பாலியாறு பெருக்கெடுத்ததன் காரணமாக தேவன்பிட்டி கிராமத்திற்கு நீர் உட்புகுந்து உள்ளது.

இதன் காரணமாக இடம் பெயர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள நிலையில் அவர்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சமைத்த உணவினை மாந்தை மேற்கு பிரதேச செயலகம்  மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: