மத்தள விமான நிலைத்திற்கு மாறும் விமான சேவைகள்!

Sunday, July 24th, 2016

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இரவு நேர விமானங்கள் மட்டுமே மூன்று மாதங்களுக்கு சேவையில் ஈடுப்படுத்தப்படும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் எச்.எம்.சி.நிமல் சிறிபாலடி சில்வாதெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த சேவை எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 30 வருடங்களுக்கு பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான ஓடு பாதையில் திருத்த வேலைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாலேயே இந்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.எனவே விமான நிலையம் காலை 8.30 மணிமுதல் மாலை 4.30 மணிவரையில் திருத்தப் பணிகள் மேற்கொள்ளும் போது மூடி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சமயத்தின் போது கட்டுநாயக்க விமான சேவைகளை மத்தள விமான நிலையம் மேற்கொள்ள உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் ஹம்பாந்தோட்டை வழியில் பயணம் செய்து பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

இருப்பினும் திட்டங்களில் சுற்றுலா ஒழுங்கமைப்பாளர்கள் இதற்கு மாற்றங்களை கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் 24 சர்வதேச விமானங்கள் சேவையை வழங்குவதாகவும், அத்துடன் கட்டுநாயக்க விமான நிலையம் சராசரியாக நாள் ஒன்றுக்கு 170 விமானங்களை கையாள்கின்றது. கடந்த வருடத்தில் 8 மில்லியனுக்கும் மேற்பட்ட பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை பயன்படுத்தியள்ளனர். கடந்த வருடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜப்பானிற்கு விஜயம் செய்த போது விமானநிலைய திருத்த பணிகளுக்காக ரூபா 74 பில்லியன் கடனாக பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: