மதுபான விற்பனை 40 சதவீதத்தினால் வீழ்ச்சி – மதுவரித் திணைக்களம் தெரிவிப்பு!
Monday, November 7th, 2022
மதுபான விற்பனை தற்போது 40 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக, மதுவரியினால் அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ள வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மதுவரி ஆணையாளர் நாயகம் எம். ஜே குணசிறி தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நெருக்கடி, பணவீக்கம், எத்தனோல் மற்றும் மூலப்பொருட்களின் விலையேற்றம் காரணமாக இந்த ஆண்டில் 3 தடவைகள் மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டன.
இந்த வருடத்தில் மாத்திரம் மதுவரியின் ஊடாக 185 பில்லியன் ரூபா வருமானமாக எதிர்ப்பார்க்கப்பட்டது.
கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 40 சதவீதம் மதுபான விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது.
எனவே, இந்த வருட இறுதியில் 160 பில்லியன் ரூபா வரையிலேயே வருமானமாக ஈட்ட முடியும் என மதுவரி ஆணையாளர் நாயகம் எம். ஜே. குணசிறி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நாடாளுமன்ற நடவடிக்கைகள் நிறுத்தம்!
நாமலுக்கு எதிரான பணமோசடி வழக்கை விசாரிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு!
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டுவரும் இந்திய மீன்பிடியாளர்களை கட்டுப்படுத்துமாறு கோரி யாழ் இந்திய துண...
|
|
|


