சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழப்பு – 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல்!

Wednesday, September 7th, 2022

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, 10 மாவட்டங்களில், 2 ஆயிரத்து 729 குடும்பங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்து 885 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்தங்களினால் 3 வீடுகள் முழுமையாகவும் 630 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட 69 குடும்பங்களைச் சேர்ந்த 237 பேர் 9 பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் தொடர்ச்சியாக மழை பெய்யும் என அந்தத் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது..

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதோடு, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: