மதுபானம் மற்றும் சிகரட் பாவிப்போருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படாது – சிகரட் மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் தெரிவிப்பு!
Friday, February 5th, 2021
மதுபானம் மற்றும் சிகரட் பாவிப்போருக்கு கொரோனா தடுப்பூசி வழங்க முடியாது என சிகரட் மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சிகரட் மற்றும் மதுபானம் பயன்படுத்துவோருக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவுள்ள நிலையில் அவர்களுக்கு தடுப்பூசி வழங்க முடியாது என்றும் எனவே அதனை கவனத்தில் எடுக்குமாறும் அவர் கூறியுள்ளார். மதுபானம் மற்றும் சிகரட் பாவனையாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்றால், அவர்கள் தடுப்பூசி வழங்கப்பட்ட தினத்திலிருந்து குறைந்தது 6 மாதங்களாவது அவற்றை பயன்படுத்தாது இருக்கவேண்டும் என்றும் சமாதி ராஜபக்ஷ கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
143 ஆவது உலக அஞ்சல் தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில்!
சீனிப்பாணியை தேன் எனக்கூறி விற்பனை செய்த நபர் அகப்பட்டார்!
2022 ஆம் ஆண்டில் 433 காட்டு யானைகள் உயிரிழப்பு - தேசிய செயல் திட்டம் சுற்றாடல் இயற்கை வளங்கள் மற்று...
|
|
|


