மதுபானங்களை கொள்வனவு செய்வதில் மதுப் பிரியர்கள் தீவிரம்!
Monday, June 21st, 2021
பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதிலுமுள்ள மதுபான நிலையங்கள் இன்றையதினம் திறக்கப்பட்டன. இந்நிலையில் மதுபானப் பிரியர்கள் மதுபானங்களை கொள்வனவு செய்வதில் ஆர்வங்காட்டியிருந்ததை அவதானிக்க முடிந்தது.
நாடு முழுவதும் அனுமதிப்பத்திரம் பெற்ற (F.L 4 மற்றும் F.L 22 A) மதுபானசாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்திருந்தது.
அனுமதிப்பத்திரம் பெற்ற மதுபானசாலைகளில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி விற்பனை நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்பதாக கொரோனா பரவல் காரணமாக பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டதை அடுத்து மதுபானசாலைகள் மூடப்பட்டிருந்தது.
இணையவழியில் மதுபானங்களை விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்ட போதும், சுகாதார தரப்பிலிருந்து எழுந்த எதிர்ப்புகளை அடுத்து அத்தீர்மானம் கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


