மதிய உணவுப் பொதி விலையும் அதிகரிப்பு!
Monday, April 30th, 2018
மதிய உணவுப் பொதியின் விலை 10 ரூபாவாலும் அப்பத்தின் விலை 2 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகச் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த விலை அதிகரிப்பு இன்றுமுதல் அமுலுக்கு வருமென அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். லிட்ரோ மற்றும் லாவ் சமையல் எரிவாயுக்களின் விலைகள் 245 ரூபாவால் அதிகரிக்கப்பட்டமையினால் தாம் இந்தத் தீர்மானத்திற்கு வந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.
உணவுப் பொருள்களின் விலைகள் தொடர்பில் அரசிடம் முறையான செயற்றிட்டங்கள் எதுவும் இல்லையெனவும் இதனால் உணவு மற்றும் மென் பானங்களின் விலைகளில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொத்துரொட்டி உள்ளிட்ட சில உணவுப் பொருள்களின் விலையை அதிகரிக்குமாறு தாம் ஏற்கனவே இலங்கை ஹோட்டல் சங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் எனவும் அவர் கூறினார்.
மேலும் மரக்கறி உள்ளிட்ட சில பொருள்களின் விலைகளை கட்டுப்படுத்துவதில் அரசு தோல்வி கண்டுள்ளதாகவும் அசேல சம்பத் தெரிவித்தார்.
Related posts:
|
|
|


