மதம் மற்றும் இனம் சார்ந்த அரசியலை தாம் ஒரு போதும் செய்யவில்லை – ஜனாதிபதி!

Sunday, August 25th, 2024

தாம் ஒருபோதும் மதம் மற்றும் இனம் சார்ந்த அரசியல் செய்யவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் தாம் எப்போதும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும், 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி எவரும் கையகப்படுத்தாத நாட்டை அனைத்து மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாப்பதற்காகவும் தாம் கையகப்படுத்தியதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அம்பாறை பொத்துவில் ஜலால்தீன் விளையாட்டரங்கில் நேற்றையதினம் பிற்பகல் இடம்பெற்ற “இயலும் ஸ்ரீலங்கா” வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தாம் இருந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க ஒற்றை ஆசனத்துடன் நாடாளுமன்ற உறுப்பினராக முன்வந்ததாகவும், நாட்டைப் பொறுப்பேற்று மக்களை அவர்கள் அனுபவித்து வரும் அடக்குமுறைகளில் இருந்து மீட்க பாடுபட்டதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்

000

Related posts:

சமூகத்தில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டமை தொடர்பில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் - ஜன...
ஒரு மணி நேரத்தால் அதிகரிப்பதன் மூலம் கற்பித்தல் காலத்தை கூடுதலாக வழங்க முடியும் - கல்வி அமைச்சு தீர்...
வடக்கில் இராணுவம் இருக்க மக்கள் விரும்புகின்றனர் கூட்டமைப்பு மட்டுமே அகற்றக் கோருகிறது - முன்னாள் அம...