மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக திருமதி. முரளிதரன் நியமனம்!
Thursday, December 14th, 2023
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக திருமதி. முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை நிர்வாக சேவை தரத்தின் விசேட தரத்தையுடைய ஒரு சிரேஸ்ட நிர்வாக அதிகாரியான இவர் கிழக்கு மாகாண சபையில் பல்வேறு நிர்வாக பதவிகளை வகித்திருந்ததோடு இறுதியாக கிழக்கு மாகாண சபையின் சுகாதார சுதேச அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றியிருந்தார்.
குறித்த நியமனமானது இன்றையதினம் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சந்திரகாந்தன் மற்றும் பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கே.டி.என். ரஞ்சித் அசோக ஆகியோர் முன்னிலையில் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாகிஸ்தான் விஜயம்!
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விரைவில் வாகனங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை!
வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள சட்டமூலம் பயங்கரவாதத்திற்கு எதிரானதே தவிர, ஜனநாயகத்திற்கு எதிரானதல்...
|
|
|


