மட்டக்களப்பில் இருந்து 310 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கடலில் நில அதிர்வு – சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அறிவிப்பு!

மட்டக்களப்பில் இருந்து 310 கிலோமீற்றர் தொலைவில் கடலில் நில அதிர்வொன்று பதிவாகியுள்ளது.
இன்று அதிகாலை 1.29 க்கு ரிக்டர் அளவுகோளில், 4.65 மெக்னிடியூட் அளவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை ரிக்டர் அளவுகோலில் 4.65 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்றும் புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஐந்து பிரபல வங்கிகள் ஈட்டிய இலாபத்தை விட வரி செலுத்தியதன் பின்னர் இலாபம் ஈட்டிய Perpetual Treasurie...
நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை!
வவுனியாவில் உணவகம் ஒன்று தீக்கிரை!
|
|