மட்டகளப்பில் அனர்த்தம் – பல வீடுகள் சேதம்!
Sunday, March 26th, 2017
மட்டக்களப்பில் அரிசி களஞ்சிய அறை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பினால் பல இலட்சம் பெறுமதியான சொத்துக்கள் நாசமாகியுள்ளன.
காத்தான்குடி பிரதேசத்தில் இன்று காலை அரிசி களஞ்சிய அறை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில் அந்த களஞ்சிய அறை முழுமையாக சேதமடைந்துள்ளது.
இந்த வெடிப்பினால் அருகில் இருந்த 2 வீடுகளுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.எரிவாயு சிலிண்டர் ஒன்று வெடித்தமையினால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த விபத்தினால் கிட்டத்தட்ட 25 இலட்சம் தேசம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts:
கொவிட் 19 வைரஸ்: ஜப்பான் பயணிகள் கப்பல் - இலங்கையர் தொடர்பில் அதிக கவனம்!
நாட்டில் மீண்டும் மலேரியா ஆபத்து - மலேரியா தடுப்பு இயக்கம் எச்சரிக்கை!
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 59 ஆயிரத்து 621 பேர் கைது!
|
|
|


