மக்கள் பொறுப்பின்றி செயற்பட்டால் பேரழிவு உருவாகும் – இராணுவத் தளபதி எச்சரிக்கை!

Monday, June 21st, 2021

மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களின் வேண்டுகோளின்படி டெல்டா வைரஸ் தொற்று காரணமாக நாட்டை தொடர்ந்தும் முடக்கி வைத்திருக்க முடியாது என தெரிவித்துள்ள தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவரும், இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா நாடு தழுவிய பயணத்தடை இன்று தளர்த்தப்பட்டாலும் மக்கள் பொறுப்பின்றி நடந்துகொண்டால் இந்தியாவின் நிலையே இங்கும் உருவாகும் என்றும் எச்சரித்துள்ளார்.

இந்தியாவில் திரிபுபட்ட டெல்ட்டா வைரஸின் தாக்கம் எவ்வாறானது என்பதை நாங்கள் தினசரி அறிகிறோம். எனவே சுகாதார நடைமுறைகள் என்பது மிக முக்கியமானது. திரிபபட்ட டெல்ட்டா வகை வைரஸ் கொழும்பு – தெமட்டகொட பகுதியில் அடையாளம் காணப்பட்டிருக்கின்றது. அதனை கட்டுப்படுத்த நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதேசமயம் அந்த வைரஸ் நாடு முழுவதும் பரவினால் பேரழிவு ஏற்படும் என தெரிவித்துள்ள இராணுவத் தளபதி மக்கள் பொறுப்புணர்வுடன் நடந்தால் பேரழிவை தவிர்க்கலாம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே தற்போதுள்ள வழி முழு நாட்டையும் தொடர்ந்தும் முடக்கி வைத்திருப்பது சாத்தியமற்றது. அன்றாடம் உழைத்து உண்ணும் மக்களை பட்டினியால் சாக விட முடியாது எனவும் இராணுவ தளபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: