மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் உள்ளூராட்சி சபைகள் இயங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் புஞ்சிஹேவா தெரிவிப்பு!

Friday, January 28th, 2022

மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் அதிகாரிகளின் நிர்வாகத்தின் கீழ் மாகாண சபைகள்,நகர சபைகள் இயங்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் தேர்தல் ஒன்றை முன்னெடுக்கும் போது முன்னேற்பாடாக செயற்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளுக்கு தெளிவூட்டும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை மாகாணசபைத் தேர்தலை நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் அதிகாரிகளின் நிர்வாகத்தில் மாகாணசபைகள் இயங்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இக்காலகட்டத்தில் மாகாணசபை தேர்தல் இடம்பெற வேண்டுமாயின் அதற்கான முடிவு நாடாளுமன்றத்திடம் இருக்கின்றது நாடாளுமன்றத்தின் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் ஆக இருந்தால் உடனடியாக தேர்தலை நடாத்த தயாராக உள்ளோம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் புஞ்சிஹேவா குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மாகாண சபைகள் தற்போது இயங்குகின்றன மாகாண சபைகள் தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்க அமைச்சு இருக்கின்றது அந்த அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. அதேபோன்று மாகாண சபைகளுக்கு என அரசாங்கத்தினால் தனியாக நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றது.

இவ்வாறான கட்டமைப்புக்களின் செயற்பாடுகளின் ஊடாக மாகாணசபைகளில செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பு இல்லாமல் அதிகாரிகளினால் இந்த மாகாணசபைகளின் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல வேண்டியது அவசியமாகி உள்ளது இந்த நிலையில் தேர்தல் ஆணைக்குழு இணக்கம் வெளியிடப் போவதில்லை.

மக்கள் பிரதிநிதிகள் இருக்கவேண்டிய இடத்திற்கு பதிலாக அதிகாரிகள் நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே எங்களின் தொடர்ச்சியான கோரிக்கையாக உள்ளது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: