மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள நேரங்களில் கழிவுகளை அகற்றுவது தொடர்பில் மாற்று நடவடிக்கை வேண்டும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் திருமதி ஜெயந்தி!

Thursday, November 15th, 2018

மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள நேரங்களில் கழிவுப் பொருட்களை அகற்றுவதால் மக்களின் இயல்பு நிலைகள் பாதிக்கப்படுவதுடன் பல சுகாதார தொற்றுக்களுக்கு மக்கள் ஆளாக நேரிடுகின்றது. எனவே யாழ் மாநகரசபையால் அகற்றப்படும் கழிவு அகற்றும் பணியை மக்களின் நலன்களை கவனத்தில் கொண்டு செயற்படுத்த வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் திருமதி ஜெயந்தி சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றையதினம் யாழ் மாநகரசபையின் மாதாந்த அமர்வு முதல்வர் தலைமையில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்

யாழ் மாநகரசபையின் கழிவு அகற்றும் வாகனங்கள் நாளாந்தம் தமது சேவைகளை அதற்கென குறித்தொதுக்கப்பட்ட நேரங்கள் என்று அட்டவணைப்படுத்தாது கண்ட கண்ட நேரங்களில் குப்பபைகளை அகற்றுகின்றதை அவதானிக்க முடிகின்றது.

இதன்காரணமாக மக்கள் நெரிசல் அதிகரிக்கும் நேரங்களில் அவர்கள் துர்நாற்றங்களால் பல அசௌகரியங்களை சந்திக்க நேரிடுகின்றது. இதனால் மக்களின் சுகாதாரம் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை கருத்தில் கொண்டு குறித்த சேவையை மேற்கொள்ளுமாறு அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே யாழ்ப்பாணம் நாவாந்துறை – காக்கைதீவு பகுதிக்கு இடைப்பட்ட பகுதியில் காணப்படும் பற்றைகளால் பல்வேறுபட்ட சமூக சீரழிவுகளை அவதானிக்க முடிகின்றது.

இதனால் குறித்த பற்றைகளை உடன் அகற்றுமாறு பலதடவைகள் இந்த சபையில் நான் கோரியிருந்தேன். ஆனால் இதுவரை அவதானத்தில் கொள்ளப்படவில்லை. எனவே மக்களது அசௌகரியங்களையும் கலாசார சீரழிவையும் தடுத்து எமது மக்களின் கலாசாரத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related posts: