மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாததன் விலையை நாடு இன்று அனுபவிக்கிறது – சுகாதார அமைச்சு!
Friday, April 23rd, 2021
புத்தாண்டு காலத்தில் மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாததன் விலையை நாடு இன்று செலுத்துவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி இலங்கை கொரோனா தொற்று காரணமாக மிக ஆபத்தான நிலையில் உள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதார சேவைகள் துணைப் பணிப்பாளர் எஸ்.எம். அர்னேல்ட் இதனைத் தெரிவித்துள்ளார்.
மே தின நிகழ்வுகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள நிகழ்வுகளுக்கு மேலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
Related posts:
யாழ் மாநகரசபை விவகாரம்: ஈ.பி.டி.பி ஆதரவு - முதல்வர் ஆர்னோல்ட் ஆறுதல்!
உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளுக்கு அமைய புதிய இறப்புச் சான்றிதழை அடுத்த வாரம்முதல் விநியோகிக்...
நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று...
|
|
|


