மக்களுக்கு மருந்து வகைகளை தட்டுப்பாடின்றி வழங்கவும் – அதிகாரிகளுக்கு அமைச்சர் கெஹெலிய பணிப்பு!
Wednesday, July 27th, 2022
மக்களுக்குத் தேவையான மருந்துப் பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கான செயற்திட்டத்தை முறைப்படி முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மருந்து இறக்குமதியை நிர்வகிப்பது தொடர்பில் சுகாதார திணைக்கள அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் மருந்து உற்பத்தியை விரைவுபடுத்துவதற்கு தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்பதால், அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனத்துடன் கலந்துரையாடி அதற்கான நடைமுறைகளை தயாரிக்குமாறும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
உலக வங்கியினால் சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்பட்ட 23 மில்லியன் டொலர்களில் இதுவரை 18.6 மில்லியன் டொலர்கள் பெறப்பட்டுள்ளமை இந்த கலந்துரையாடலின் போது தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
|
|
|


