கொரோனா அறிகுறிகள் வெளிப்படாத பலர் இன்னமும் சமூகத்தில் இருக்கின்றனர் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை!

Friday, February 25th, 2022

கொரோனா தொற்றினை சாதாரணமானதாக கருதுவது புத்திசாலித்தனமானதல்ல என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளாத பல தொற்றாளர்கள் இன்னும் சமூகத்தில் இருப்பதாகவும், அவர்களுக்கு எவ்வித கொவிட் அறிகுறிகளும் வெளிப்படுத்தப்படாமல் சுகதேகிகளை போன்று காணப்படுவதாகவும் வைத்தியர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பூரண தடுப்பூசியேற்றம் மற்றும் முறையாக சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றல் என்பன கொவிட் தொற்றிலிருந்து பாதுகாப்பினை பெறக்கூடிய ஆகச் சிறந்த வழிமுறைகளாகுமென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: