மக்களின் நலன்கள் முன்னிறுத்தப்படவில்லை: ஈ.பி.டி.பியால் நெடுந்தீவு பிரதேச சபையின் பாதீடு தோற்கடிப்பு!
Thursday, December 20th, 2018
நெடுந்தீவு மக்களதும் பிரதேசத்தினதும் நலன்களை முன்னிறுத்தாது தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் கொண்டுவரப்பட்ட நெடுந்தீவு பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்குரிய பாதீடு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் மக்களின் நலன்களை முன்னிறுத்தி தோற்கடிக்கப்பட்டது.
இன்றையதினம் நெடுந்தீவு பிரதேச சபையின் சபா மண்டபத்தில் பாதீடு தொடர்பான விஷேட கூட்டம் நடைபெற்றது. இதன்போது பாதீட்டு முன்மொழிவுகள் சபையில் பிரதேச சபை தவிசாளரால் முன்வைக்கப்ட்டது.
இதன்போது குறித்த பாதீட்டில் நெடுந்தீவு மக்களின் நலன்கள் சாராது தனிநபர் சுயவிருப்புகளடங்கிய வகையில் பல்வேறு முன்மொழிவுகள் காணப்பட்டதை அடுத்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி குறித்த பாதீட்டை நிராகரித்தது.
கடும் வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில் குறித்த பாதீடு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதன்போது குறித்த பாதீட்டுக்கு ஆதரவாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 6 பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் சுயேட்சைக்குழுவின் 2 உறுப்பினர்களுமாக மொத்தம் 8 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்திருந்தனர்.
குறித்த பாதீட்டுக்கு ஆதரவாக கூட்டமைப்பின் 4 உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய கட்சியின் 1 உறுப்பினருமாக மொத்தம் 5 வாக்குகள் கிடைத்தன.
இந்நிலையில் குறித்த பாதீடு 3 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


