கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர் ஒருவருக்கு 5 இலட்சம் வரை அபராதம் – நுகர்வோர் விவகார அதிகாரசபை!

Monday, June 13th, 2022

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர் ஒருவருக்கு ஒரு இலட்சம் முதல் 5 இலட்சம் ரூபா வரையிலான அபராதம் விதிக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரித்துள்ளது.

அத்துடன் அத்தகைய வர்த்தகர்கள் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படும் போது ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.

இதுவரை அரிசியை அதிக விலைக்கு விற்கும் வியாபாரிகளை கண்டுபிடிக்க, சுமார் 70 சோதனைகள் நடத்தப்பட்டதாகவும், விலையை காட்சிப்படுத்த தவறியதற்காக சுமார் 150 சோதனைகள் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

வெள்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசியின் அதிகபட்ச சில்லறை விலையை 210 ஆக அறிவித்து ஜூன் 10 ஆம் திகதியன்று சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதேவேளை மொனராகலை மற்றும் அனுராதபுரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அரிசி ஒருதொகையை நேற்றையதினம் கைப்பற்றியதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய இடங்களிலும் உள்ள ஆலைகளில் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள 43,000 மெட்ரிக் தொன் நெல்லை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் நீல் டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய சதொச, கூட்டுறவு நிலையங்கள் மற்றும் சிறப்பு அங்காடிகள் ஊடாக நிவாரண விலையில் அரிசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிறுவனங்களிடம் இருந்து இதற்கான முன்பதிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. சிவப்பு மற்றும் வெள்ளை கெக்குலு அரிசி ஒரு கிலோகிராம் 197 ரூபாவுக்கும், நாடு ஒரு கிலோகிராம் 199 ரூபாவுக்கும், சம்பா ஒரு கிலோகிராம் 205 ரூபாவுக்கும், கீரி சம்பா ஒரு கிலோகிராம் 215 ரூபாவுக்கும் கொள்வனவு செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசிய பொருளான அரிசியை வழங்கும் வகையில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் நீல் டி சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

000

Related posts: