மக்களின் உரிமைகளை பாதுகாப்பது உயர்நீதிமன்றத்தின் முக்கிய கடமை!
Wednesday, March 1st, 2017
சட்டத்தின் அதிகாரம் மற்றும் மக்களின் உரிமைகளை பாதுகாப்பது உயர்நீதிமன்றத்தின் முக்கிய கடமை என, பிரதம நீதியரசர் கே.ஶ்ரீபவன் தெரிவித்துள்ளார். இலங்கையின் பிரதம நீதியரசராக உள்ள அவர் நேற்றுடன் ஓய்வு பெறுகிறார்.
இதனை முன்னிட்டு உயர்நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற விஷேட நிகழ்வின் போது உரையாற்றிய வேளையே ஶ்ரீபவன் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார். அத்துடன் தனக்குரிய கடமைகளை தான் உரிய முறையில் நிறைவேற்றியதாக நம்புவதாகவும் அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்

Related posts:
இலங்கை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் தனிப்பிரிவு!
தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு நிவாரணம் - போக்குவரத்து அமைச்சு!
அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் கிளிநொச்சி மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் தொடர...
|
|
|


