மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தியுள்ளது தகவல் அறியும் சட்டம்!

தகவல் அறியும் சட்டம் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தியுள்ளது என நிதி மற்றும் தகவல் ஊடகத்துறைப் பிரதி அமைச்சர் லஸந்த அழகியவண்ண தெரிவித்தார்.
லேக்ஹவுஸ் நிறுவனத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து நிதி மற்றும் தகவல் ஊடகத்துறை பிரதி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்:
இந்தச் சட்டமூலத்தை மேலும் யதார்த்தமாக்கும் வகையில் இது தொடர்பாக மக்களுக்கு விளக்கமூட்டும் விசேட வேலைத்திட்டம் ஒன்று தற்சமயம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சட்டமூலம் குறித்து பொதுமக்கள் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
Related posts:
யாழின் சில பகுதிகளில் இன்று மின்தடை !
வேலணை சாட்டி குடிநீர் கிணறுகளின் பாதுகாப்பு தொடர்பில் தவிசாளர் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று ஆர...
அதிபர்கள், ஆசிரியர்கள் ஜூலை 18 -19 சுகயீன விடுமுறையில்!
|
|