6 ஆம் தரத்தில் மாணவர்களை, புதிய பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான அனுமதியை ஒன்லைன் தொழில்நுட்பம் ஊடாக மேற்கொள்ள ஏற்பாடு!

Friday, December 11th, 2020

2021 ஆம் ஆண்டில் 6 ஆம் தரத்தில் மாணவர்களை, புதிய பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான அனுமதியை முதன்முறையாக ஒன்லைன் தொழில்நுட்பம் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த திட்டம் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தலைமையில் கீழ் இடம்பெற்றது.

இதன்படி 2020 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட ரீதியில் அதிக மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களுக்கு புதிய பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் விண்ணப்பித்துள்ள பாடசாலை பெயர், உட்பட விண்ணப்பம் தொடர்பான ஏனைய விபரங்கள் பாடசாலை அதிபரால் பூர்த்தி செய்யப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் இன்றுமுதல் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி வரை சிங்களம் அல்லது தமிழ் மொழிகளில் சகல அதிபர்களுக்கும் இந்த தரவை உள்ளிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


நாட்டின் நலன் கருதி உண்மைகளை வெளிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி தீர்மானங்களை எடுப்பார் - அமைச்சர் கெஹ...
இரசாயனப் பொருட்களுக்கு தட்டுப்பாடு - யாழ்.போதனாவில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக...
இறுக்கமான நடைமுறையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை - மீறுவோருக்கு கடுமையான சட்ட நடவடிக்கை என சி...