மக்களிடம் பேரம் பேசுமளவிற்கு தேசியம் பேசும் தமிழ் கட்சிககளிடையே அரசியல் வறுமை ஏற்பட்டுள்ளது – ஈ.பி.டி.பி.யாழ்.மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளர் ரங்கன் சுட்டிக்காட்டு!

Friday, December 17th, 2021

மக்களிடம் பேரம் பேசுமளவிற்கு இதர தேசியம் பேசும் தமிழ் கட்சிககளிடையே அரசியல் வறுமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள என பருத்தித்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் நாம் மக்களிடம் ஒருபோதும் பேரம் பேசியதுகிடையாது. மக்களுக்கு சேவையாற்றுவது எமது தார்மீககடமை என்றும் தெரிவித்துள்ளார்..

வடமராட்சி கிழக்கு, உடுத்துறை 10ம் வட்டார கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க நான்காம் ஆண்டு நிறைவுவிழாவும் அலுவலகத் திறப்பு விழா சங்கத் தலைவர் தங்கவேல் தங்கரூபன் தலைமையில் இடம்பெற்றது. அதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –  

யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர் வடமராட்சி கிழக்குப்  பகுதியில் 2010 ஆம் ஆண்டில் மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டது. அன்று ஒரு கடினமான நிலையில் எமது கட்சியின் தலைவரும் அமைச்சருமான  டக்ளஸ் தேவானந்தா   இப்பணியை ஆரம்பித்தார்.

அன்று எவ்வித அடிப்படை வசதிகளும் இங்கு  இருக்கவில்லை. வாழ்வாதாரத் தேவைகள் மிகவும் அதிகமாகக் காணப்பட்டன. அன்று ஒரு சூழல்.  10 வருடங்கள் கழிந்தபின்னர் வாழ்க்கைச் சக்கர ஓட்டத்தில் இன்று வேறுவடிவிலான தேவைகள் உருவாகியுள்ளன. 2017ம் ஆண்டு உடுத்துறை 10ஆம் வட்டார கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் சட்டரீதியாக தனியாக பதிவு மேற்கொள்ள வேண்டிய ஒரு சூழலில் பல சட்டவல்லுனர்களைக் கொண்டதாகக் கூறிக்கொள்ளும் தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள் தாம் சங்கத்தை பதிவு செய்து தருவதாயின் தமது கட்சிக்கு தேர்தல் பணியாற்ற வேண்டும் எனபேரம் பேசியதையாவரும் அறிவீர்கள்.

மக்களிடம் பேரம் பேசுமளவிற்கு அவர்களது அரசியல் வறுமையாக இருக்கின்றன. நாம் இப்பிரதேசத்தில் எவ்வளவோ அளப்பரிய பணிகளையும் சேவைகளையும் அர்ப்பணிப்புடன் ஆற்றியுள்ளோம். ஆனால் ஒருபோதும் மக்களிடத்தில் நாம் பேரம் பேசியதுகிடையாது. மாறிமாறிவந்த அரசுகளுடன் பலசந்தர்ப்பங்களில் பல்வேறு சூழல்களில் நாம் மக்களுக்காகபேரம் பேசியிருக்கின்றோம். இப்போது இச்சங்கத்தை சட்டரீதியாக பதிவுகளைமேற்கொண்டு கடற்தொழில் அமைச்சர் பதிவுச் சான்றிதழை வழங்கியுள்ளார்.

எம்மை எவ்வளவு இழிவாக விமர்சனம் செய்து அரசியல் பிழைப்பு நடத்தியவர்களைக் கூட நாம் பழிவாங்கவில்லை மாறாக மக்கள் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க எங்கள் பலத்துடன் அவர்களின் அரசியல் எதிர்காலத்தை பாதுகாத்துள்ளோம் எனவும் அவர்மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: