மக்களது தேவை எதுவோ அதை பெற்றுக் கொடுப்பவர்களாகவே ஈழமக்கள் ஜனநாயக கட்சி இருந்து வருகின்றது – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் வி.கே.ஜெகன்!

Sunday, September 4th, 2016

யுத்தகாலத்திலும் சரி இன்றும் சரி மக்களது தேவை எதுவோ அதை பெற்றுக் கொடுப்பவர்களாகவே ஈழமக்கள் ஜனநாயக கட்சி இருந்த வருகின்றது. குடாநாட்டு மக்களுக்கு குறிப்பாக தீவக பகுதி மக்களுக்கான வாழ்வியல் தேவைகளுக்கும் பாதுகாப்புக்கும் ஒரு நம்பகரமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக பெரும்பணியாற்றியவர் எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) தெரிவித்துள்ளார்.

2

நேற்றையதினம்(3) வேலணை பிரதேச கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கட்சியின் பொதுச்சபை மற்றும் நிர்வாக சபையினருடனான சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் –

நாம் அதிகாரத்திலிருந்தபோது செயல்வடிவில் மக்களுக்கு பெற்றுக்கொடுத்த பெரும் பணிகளையும் கட்டுமானங்களையும் எமது கட்சிக்கான அரசியல் மயமாக்கலாக மேற்கொள்ளாது மக்கள் சேவையாகவே கருதி எமது பணிகளை மேற்கொண்டு வந்தோம். அனால் தற்போது நாம் ஒருமாறுபட்டதும் புத்தெழுச்சி கொண்டதுமான மக்கள் மயப்படுத்தப்பட்ட பாதையில் பயணிப்பதற்காகவே கிராம மட்டங்களிலிருந்து வட்டார ரீதியான செயற்பாட்டாளர்களையும் அதற்கான பிரதிநிதிகளையும் உள்வாங்கி எமது செயற்பாட்டை விரிவுபடுத்தியுள்ளோம்.

1

மத்திய அரசுடன் ஒரு இணக்கத்தை தோற்றுவிப்பதன் மூலமே தமிழ் மக்களது எதிர்கால தேவைகளையும் அபிவிருத்திகளையும் வலுப்படுத்த முடியும். மக்களது தேவைகள் எதுவோ அதை பெற்றுக்கொடுப்பவர்களாகவே நாம் இருந்துவருகின்றோம். தற்போது ஆட்சி அதிகாரத்தில் நாம் பங்கு கொள்ளாதுள்ள நிலையிலும் எமது மக்களுக்கான தேவைகளை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றோம் – என்றார்.

Related posts:


வாக்களிப்புக் கால நீடிப்பு உள்ளிட்ட பல்வேறு இறுதித் தீர்மானங்கள் எடுக்கப்படும் என அறிவிப்பு!
தொடரும் கனமழையால் வெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு மாகாணம் - இன்றும் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவ...
பொருளாதாரத் துறையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை!