மகளிடம் சேட்டை புரிந்தவரின் காதை அறுத்த தந்தை – கிளிநொச்சியில் சம்பவம்!
Monday, November 29th, 2021
தனது மகளிடம் சேட்டை புரிந்த அயலவரின் காதை அறுத்து காயப்படுத்திய தந்தையை தருமபுரம் பொலிசார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம், கிளிநொச்சி – தருமபுரம் பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் உறவினர்கள் இல்லாத சமயத்தில் 12 வயது மதிக்கத்தக்க மகளிடம், குறித்த நபர் சேட்டை புரிந்துள்ளதாக தெரிவித்தே தந்தை இத் தாக்குதலை மேற்கொண்டுள்ளாரென தெரியவருகிறது.
குறித்த நபரின் கை மற்றும் கால் போன்ற இடங்களில் பலமாக வெட்டப்பட்ட நிலையில், தருமபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அங்கிருந்து கிளிநொச்சி வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை தருமபுரம் பொலிசார் கைது செய்துள்ளனர். அத்துடன் வெட்டப்பட்ட வாள் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை தருமபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
|
|
|


