போலி முகநூல் கணக்குகள் தொடர்பில் விசாரணை ஆரம்பம் – கணனி குற்ற விசாரணைப் பிரிவு தகவல்!

போலியான முகநூல் கணக்குகள் தொடர்பில் கணனி குற்ற விசாரணைப் பிரிவின் சமூக ஊடக குற்ற விசாரணை பகுதி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சிறுமிகள் மற்றும் பெண்களின் புகைப்படங்களை முகநூலில் ஆபாசமாக பதிவிடும் நபர்கள் மற்றும் முகநூல் பக்க அட்மின்கள் என்போர் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது.
சிறுமிகள் மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான பல முகநூல் பக்கங்கள் இயங்கி வருவதாக குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு போலி முகநூல் கணக்குகளின் ஊடாக குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என சமூக ஊடக குற்ற விசாரணைப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் பி.ஐ.வீ கயசிறி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
புதிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான வர்த்தமானி அடுத்த வாரம் - பைசர் முஸ்தபா!
9 மாகாணங்களுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படும்!
இன்றும் சில பகுதிகளில் மழை பெய்யக் கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
|
|