போராட்டத்துக்கு தயாராகும் சுகாதாரப் பரிசோதகர்கள்!
Saturday, September 9th, 2017
வடக்கு மாகாணத்திலுள்ள ஐந்து பொதுசன சுகாதாரப் பரிசோதகர்களை கட்டாய இடமாற்றத்துக்கு உட்படுத்தியமை உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடெங்குமுள்ள பொதுசன சுகாதாரப் பரிசோதகர்கள் அடுத்த வாரம் காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
தங்களது கோரிக்கைகளை முன்வைத்து உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடர்ந்திருப்பதாகவும், தாங்கள் எதிர்பார்க்கும் தீர்வுகள் கிடைக்காவிட்டால் மறு அறிவித்தல் எதுவுமின்றி நாடெங்கும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கவுள்ளதாகவும் பொதுசன சுகாதாரப் பரிசோதகர்களின் சங்கத் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை தாங்கள் மேற்கொண்ட அடையாள வேலைநிறுத்தத்துக்கு எவ்வித பலாபலனும் கிடைக்காததால் காலவரையறையற்ற போராட்டத்தில் இறங்க முடிவு செய்திருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
Related posts:
பொறிமுறைமை குறித்து அமைச்சர் மங்கள ஜெனீவாவில் விளக்கம்!
வருமானத்தை இழந்துள்ள பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அடுத்த வாரம் முதல் நிவாரணம் - போக்...
பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ஷ தெரிவு!
|
|
|
பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு பதிலாக புதிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் – அமைச்சர் கெஹெல...
இலங்கை கிரிக்கெற் துறையின் வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்குமாறு அர்ஜுனவிடம் அமைச்சர் நாமல் கோரிக்கை!
பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனை நியமிப்பதே சிறந்தது - பொது பாது...


