போராட்டங்களில் சிறுவர்கள் பங்கேற்பது தடை செய்யப்பட வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!
Thursday, October 13th, 2022
பொதுப் போராட்டங்களில் சிறுவர்கள் பங்கேற்பது தடை செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் சட்டங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க முயல்கின்றன என்றும், போரின் போது புலிகளின் தலைவர் பிரபாகரன் செய்ததைப் போலவே பெற்றோர்கள் பழிவாங்கும் நோக்கில் குழந்தைகளை போராட்டங்களுக்கு அழைத்துச் செல்கிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்..
குழந்தைகள் போராட்டங்களுக்கு கொண்டு வரப்பட்டால், இதுபோன்ற செயல்களைத் தடுக்க பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டும், இது பல்கலைக்கழக மாணவர்களும் தங்கள் போராட்டங்களுக்கு குழந்தைகளை அழைத்து வரக்கூடும்,” எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பிரச்சினைகளை தெரிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்!
வடக்கின் தேசிய அடையாளங்களை மாற்றியமைக்க திட்டமிடும் வடக்கு மாகாண சபை!
இலங்கையில் காதலர் தினத்தை முன்னிட்டு கடுமையாகும் சட்டம் – 'காதலுக்கு ஒரு மரம்' நடும் திட்டத்தை அறிமு...
|
|
|


