போராட்டக்காரர்கள் தங்கியுள்ள அலரி மாளிகைக்குள் மோதல் – பலர் காயம்!
Tuesday, July 12th, 2022
இலங்கையின் பிரதமர் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான, அலரி மாளிகைக்குள் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 10 பேர் காயமடைந்துள்ளனர்.
அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்களில் இருவர் பின்னர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தின் பின்னணி தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.
கடந்த 9 ஆம் திகதி போராட்டக்காரர்களால், ஜனாதிபதி மாளிகை கைப்பற்றப்பட்ட பின்னர், ஜனாதிபதி செயலகமும் அலரி மாளிகையும் ஆக்கிரமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அரசுக்கு சொந்தமான உர நிறுவனங்கள் மூலம் சேதன பசளை இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!
தற்காலிக சிரமங்களை சமாளித்து இலங்கை விரைவில் அபிவிருத்திக்கான இலக்கை அடையும் – சீனா நம்பிக்கை தெரிவி...
உயர்கல்வி சந்தர்ப்பங்களை விரிவுபடுத்த வெளிநாட்டு பல்கலைகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படவேண்ட...
|
|
|


