உயர்கல்வி சந்தர்ப்பங்களை விரிவுபடுத்த வெளிநாட்டு பல்கலைகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படவேண்டுமென்கிறார் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த!

Thursday, May 26th, 2022

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்கலைக்கழக மானிய ஆணைக் குழுவுக்குமிடையே ஏற்படுத்தப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஊடாக நாட்டில் உயர்கல்வி சந்தர்ப்பங்களை விரிவுபடுத்த வேண்டுமென கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடியான சூழலில் பிள்ளைகளின் கல்விக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உயர்கல்வி மூலோபாய திட்டங்களை எதிர்காலத்தில் செயல்படுத்தும் விதம் பற்றியும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்கலைக்கழக மானிய ஆணைக் குழுவுக்குமிடையே ஏற்படுத்தப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் ஊடாக புதிய சர்வதேச தொடர்புகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்நாட்டில் உயர் கல்விக்கான சந்தர்ப்பங்களை விரிவுபடுத்துவது தொடர்பாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த உயர் கல்வி அமைச்சின் அதிகாரிகளை சந்தித்த பின்னர் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார். 

பலவிதமான பேரழிவை ஏற்படுத்திய பிரச்சினைகளுக்கு மத்தியில் கடந்த இரண்டு வருடகாலமாக தொடர்ந்தும் செயற்பட்ட அரச சேவை கட்டமைப்பாக பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயர்கல்வி கட்டமைப்பு இங்கு அமைச்சரால் பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: