போதைப் பொருள் கடத்தலை தடுத்து நிறுத்த விசேட நடவடிக்கை – பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன அறிவிப்பு!
Tuesday, September 27th, 2022
வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதற்கு ஆதரவானவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்தார்.
மேலும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் போதைப் பொருள் கடத்தலை தடுத்து நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை சமூக வலைதளங்களை தவறான பிரசாரங்களுக்கு பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் சட்டத்தை கொண்டுவருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கமல் குணரத்ன தெரிவித்தார்.
பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டத்தில் கலந்துகொண்டு கருது தெரிவிக்கும்போதே பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படுகின்றது?
அடுத்த வாரம்முதல் பயணிகள் பேருந்தகளில் முற்கொடுப்பனவு அட்டை முறைமை நடைமுறை - போக்குவரத்து அமைச்சு அற...
அடுத்த வாரமளவில் ரஷ்யாவினால் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் நாட்டை வந்தடையும்!
|
|
|


