கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படுகின்றது?
Sunday, June 5th, 2016
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் திருத்தப் பணிகளுக்காக அடுத்த வருட ஆரம்பத்திலிருந்து மூன்று மாதங்களுக்கு மூடப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அதன்பிரகாரம் 2017 ஜனவரி 6ஆம் திகதி முதல் 2017 ஏப்ரல் 6ஆம் திகதி வரை பகல் வேளைகளில் காலை 8.30 முதல் மாலை 4.30 வரை மாத்திரம் விமான நிலையம் மூடப்படும். அந்தக் காலப் பகுதியில் சகல விமானங்களினதும் வருகைகளும் புறப்படல்களும் இரத்துச் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
விமான நிலையம் இவ்வாறு மூடப்படுவது ஸ்ரீலங்கன் விமான சேவைக்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தும் என்று விமான நிலையத் தொழிற்சங்கங்கள் தமது கடும் ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மழை பெய்யும் என எதிர்பார்ப்பு – வானிலை அவதான நிலையம்!
வறிய மாணவர்களின் உயர்தர கல்வியை ஊக்குவிக்கும் 'ப்ரக்ஞாபந்து' புலமைப்பரிசில் நிதியம் பிரதமர் தலைமையில...
சட்ட விரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள மீன்பிடிப் படகுகள் ...
|
|
|
கட்டுப்பாடுகளை தளர்த்தும் சுகாதார அதிகாரிகளின் முடிவுக்கு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கண்டனம்...
அரசாங்கத்திற்கு வருமானம் அதிகரித்தால் மானியம் வழங்கப்படும் - ஜனாதிபதி நிதி அமைச்சுக்கு பணிப்புரை விட...
சில துறைகளைத் தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அதிவிசேட வ...


