போதைப்பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனை – நீதி அமைச்சர் ஆதரவு!

Thursday, January 2nd, 2020

போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனையை அமுல்படுத்தும் திட்டத்திற்கு நீதி அமைச்சர் நிமல் சிறிபாலா டி சில்வா ஆதரவு தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சில் இன்று கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், இது போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனையை அமுல்படுத்தும் பிற நாடுகளும் இருப்பதாக கூறியுள்ளார்.

அமெரிக்கா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள போது ஏன் இலங்கையில் மரண தண்டனையை செயற்படுத்த முடியவில்லை என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இதேவேளை, போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு, குற்றவாளியாகக் காணப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு அதனை அமுல்படுத்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்திருந்தார்.

எனினும், மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வமாக எவ்வித ஆவணத்திலும் கையெழுத்திட்டிருக்கவில்லை.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

குறித்த மனுக்கல் மீதான விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

இந்த தடை உத்தரவு எதிர்வரும் மார்ச் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனையை அமல்படுத்தும் திட்டத்திற்கு நீதி அமைச்சர் நிமல் சிரிபாலா டி சில்வா ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: