போதைப்பொருள் பாவனை அதிகரித்துவருவது வருத்தமளிக்கின்றது – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு!

Friday, August 25th, 2023

வடபிராந்தியத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துவருவது வருத்தமளிப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (25.08.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் –

சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் குறிப்பாக ஒரு சில வணிகர்கள் சார்ந்தோர் மத்தியில் போதைப் பொருள் கைப்பற்றப்படுவதும் குறித்த பாவனையால் செல்வந்த இளைஞர்கள் உயிரிழப்பதும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதும் அதிகரித்துள்ளது.

இது எமது இளம் சமுதாயத்தை வெகவாக பாதித்தும் வருகின்றது என்றும் சுட்டிக்காட்டிய அவர் இவ்விடயத்தில் பெற்றோர்களும் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துகின்ற தரப்பினரும் உரிய அக்கறை செலுத்த வேண்டும் எனவும் வலியுறத்தியுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கிராம உத்தியோகத்தர்கள் பலர் உயர் அதிகாரிகள் முன்னிலையில் தெரிவித்த கருத்துக்கள் குடாநாடடையே உலுக்கி போட்டது.

சமூகவிரேத செயல்களில் ஈடுபடுகின்ற சந்தேக நபர்கள் தொடர்பில் பொலிசாரக்கு தாம் வழங்கும் தகவல்கள் சில நிமிடங்களிலேயே குறித்த தரப்பினருக்கு தகவல் தெரிவிக்கப்படுவதாகவுவும் அச்சந்தேக நபர்களே  தம்மிடம் தொடர்புகொண்டு இவ்வாறு நீங்கள் பொலிசாருக்க தகவல்கள் வழங்கியுள்ளீர்கள் என வினாவுகதாகவும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இது உண்மையில் சமூகவிரோத செயற்பாட்டை மேற்கொள்பவர்களுக்கு ஏதுவானதான சந்தர்ப்பத்தை உருவாக்கி கொடுப்பதாக மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

சமீபத்தில் பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமை மூடி அவர்கள் வெளியேற மற்பட்டபொது அப்பகுதி மக்கள் கவனயீர்ப்புகு போராட்டத்தை மேற்கொண்டு பொலிசார் மீது நம்பிக்கை இல்லை, இராணுவம் வெளியேற வேண்டாம் என தமது ஏக்கத்தை வெள்ப்படுத்தியிருந்தனர். இதிலிருந்து ஒரு செய்தியை உணரக்கூடியதாக இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: