போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் திணைக்களத்தின் உயரதிகாரிகளுக்கு பணிப்பு!
Sunday, December 18th, 2022
படுகொலைகள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் திணைக்களத்தின் உயரதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நேற்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு அவர்களை அழைத்து முக்கியமான கலந்துரையாடலை நடத்தியதன் பின்னர் அவர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
ஜனசக்தி குறூப் நிறுவனத்தின் தலைவர் தினேஷ் ஷாப்டரின் கடுமையான சித்திரவதை மற்றும் படுகொலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் படுகொலைகள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பிலும் அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டு அறிந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சிறுநீரக நோயாளர்களுக்கு வீட்டுத்திட்டம்!
சட்டத்தை இரத்து செய்ய வேண்டாம் - 19ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் பெபரல்!
பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டாலும், பிரிவினைவாத எண்ணத்தை முறியடிக்க வேண்டிய பொறுப்பு இன்னும் உள்ளது -...
|
|
|


