போதைப்பொருளை ஒழிக்க மேலும் சிறந்ததொரு வேலைத்திட்டம் அறிமுகம் – ஜனாதிபதி!
Thursday, March 28th, 2019
போதைப்பொருளை அழிப்பதற்காக தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்களை விட, சிறந்ததொரு வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
காவற்துறையினர் மற்றும் முப்படையினர் இணைந்து நகர் பகுதியில் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.
விசேடமாக மேல்மாகாணம், கிழக்கு, தென் மாகாணங்களின் கரையோர பிரதேசங்கள் மற்றும் கொழும்பு நகர் ஆகியன போதைப்பொருட்கள் அதிக பாவனை கொண்ட பிரதேசங்களாகும்.
குறித்த பிரசேதங்களில் தற்போது வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அவை எதிர்காலத்தில் மேலும் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படும்.
அத்துடன், சட்டவிரோத மதுபானங்களை நாட்டில் இருந்து ஒழிப்பதற்கு காவற்துறையினருக்கு 3 மாதகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2 வருடங்களில் அவை முற்றாக ஒழிக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
Related posts:
|
|
|


